Subscribe Us

header ads

புதிய டொல்பின் இனம் பிரேஸில் ஆற்றில் கண்டுபிடிப்பு

ஆற்றில் வாழும் 100 வருடங்கள் பழைமையான புதியவகை டொல்பின் இனமொன்றினை விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.

பிரேஸில் நாட்டிலுள்ள அமேஸன் மழைக்காட்டிலுள்ள அரகுயய் எனும் ஆற்றிலேயே இப்புதிய டொல்பின் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'இனியா அரகுயய்யேன்ஸிஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பற்களுடன் காணப்படும் புதிய டொல்பின் இனமானது அமேஸன் பகுதியில் கண்டுபிடிக்கப்படும் 3ஆவது டொல்பின் என இவ்வாராய்ச்சியின் தலைமை எழுத்தாளரும் உயிரியலாளருமான தோமஸ் ஹிர்பெக் தெரிவித்துள்ளார்.

2,627 கிலோ மீற்றர் நீளமான குறித்த ஆற்றில் சுமார் 1000 இனியா அரகுயய்யேன்ஸிஸ் இன டொல்பில் வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments