பொலநறுவையில் பெய்கின்ற கடும் மழைக்காரமாக
குடாஓயா பெருக்கெடுத்தமையினால் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைக்காக
சென்றிருந்த சுமார் 350 விவசாயிகள் வெள்ளத்தில் சிக்குண்டிருப்பதாக
தெரிவிக்கப்படுகுpன்றது.கடந்த ஆறுமாதங்களாக இந்த பகுதியில் கடும் வறட்சி நிலவிய நிலையிலேயே கடந்த சில நாட்களாக மழைபெய்துவருகின்றது.
வெள்ள நீரின் மட்டம் அதிகரித்துச்செல்வதனால் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பத்தற்கு தோணிகளை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிவில் பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் டீ.ஜே.பந்துபால தெரிவித்தார்.
இதேவேளை, பாராகிரம சமுத்திரத்தின் நீர் மட்டமும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
|
|

0 Comments