A.J.M மக்தூம்
இஸ்பைனின் வேலன்சியா நகரில் அமைந்துள்ள பள்ளிவாயல் ஒன்றின் மீது இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட காடையர்களினால் இனவெறித் தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதல் தொடர்ப்பாக மேலும் தெரியவருவதாவது,
இனவெறிப் பிடித்த காடையர் குழுவொன்று தொழுகைக் கடமையை நிறைவேற்ற செல்வோரை இலக்கு வைத்து குறித்த மஸ்ஜிதில் எரிபொருட்களை தெளித்து தீமூட்டியுள்ளனர். இதனால் குறித்த மஸ்ஜித் எரிந்து பாரிய சேதத்துக்குள்ளான போதும், தொழுகைக்கு சென்றோர் இறை உதவியால் தப்பித்துக் கொண்டுள்ளனர்.
மேற்படி தாக்குதல் சம்பவத்தினால் முஸ்லிம்கள் மத்தியில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த மஸ்ஜித் மேற்படி தாக்குதலுக்கு உள்ளானமை இதுவே முதல் முறை அல்ல மாற்றமாக பல்வேறு விதமான தாக்குதளுக்கு அந்த மஸ்ஜித் இலக்காகி உள்ளமை குறிப்பிடத் தக்கது.
அதேநேரத்தில் 2001 ம் ஆண்டு முதல் ஊடகங்களும், அரசியல் வாதிகளும் இஸ்லாத்தை மிகவும் மோசமாக சித்தரித்து கருத்துக்கள் வெளியிட்டு வந்ததின் எதிரொலியாகவே குறித்த மஸ்ஜித் மீதான மேற்படி தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப் படுகிறது
0 Comments