Subscribe Us

header ads

வெள்ளைக் கடலாமையான ரோஸியின் உரிமையாளர் உட்பட இருவர் கைது பொய் முறைப்பாடு, சட்டத்தை மீறியமை தொடர்பில் வழக்கு

கொஸ்கொட கடலாமைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்தின் உரிமையாளரான சந்திரசிரி அப்ரேவ் மற்றும் அவரது பணியாளர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸில் பொய்யான முறைப்பாடு  வழங்கியமை மற்றும் வன ஜீவிராசிகள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே   இவர்கள் இருவரும் நேற்று மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மெட்ரோ நியூஸுக்கு தெரிவித்தது.


கடலாமைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்தின் உரிமையாளர் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி  கொஸ்கொடை ஆமைகள் பாதுகாப்பு நிலையத்திலிருந்து ரோஸி என்ற வெள்ளை ஆமை காணாமல் போனமை தொடர்பில்  பொலிஸில் பொய்யான முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.


காணாமல் போன ஆமை தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டக்கு அமைய நேற்று முன்தினம் தினம் குறித்த  ஆமை இனத்தை சேர்த ஓர் ஆமையை அம்பலங்கொடையிலுள்ள ஆமைகள் பாதுகாப்பு நிலைய  உரிமையாளரின் மகளின் வீட்டிலிருந்து பொலிஸார் கண்டு பிடித்திருந்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் ஆமையையும் நேற்று பலப்பிடடிய நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.

Post a Comment

0 Comments