Subscribe Us

header ads

சவூதியில் விமானம் விபத்து; 29 பேர் காயம்

சவூதி அரேபிய விமானம் ஒன்று நேற்று அவசரமக தரையிறக்கப்பட்டபோது மோதி விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் 767 வகையை சேர்ந்த விமானம் தொழில்நுடப கோளாறு காரணமாக அதன் பின் சக்கரங்கள் இல்லாமல் இறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள்  தகவல் வெ ளியிட்டுள்ளன.

அந்த விமானம் மஸ்கட் மற்றும் ஈரானில் இருந்து சுமார் 315 பயணிகளை ஏற்றிக்கொண்டு சவூதிக்கு வந்துள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டது. அதன் பின்னர் அங்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டன.

Post a Comment

0 Comments