Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: ஜனவரி 22

1506 : 150 சுவிஸ் பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது

 1798 :  நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1840 : பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூஸிலாந்தை அடைந்தனர்.

1863 : ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலாரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.

 1889 : கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.

 1899 : ஆறு அவுஸ்திரேலிய குடியேற்றப்ப pரதேசங்களின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர்.

 1901 : பிரிட்டனில் 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது வயதில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.

1905 : சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.

 1906 : பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

1915: மெக்ஸிகோவில்  இடம்பெற்ற ரயில் விபத்தில் சுமார் 600 பேர் உயிரிழந்தனர்.

 1941 : இரண்டாம் உலகப் போரல்  லிபியாவின் டோப்ருக் நகரை நாசிப் படைகளிடம் இருந்து பிரிட்டன் கைப்பற்றியது.

1957 : சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.

1964 : கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.

1969: சோவியத் யூனியனின் தலைவர் லியோனிட் பிரஸ்னேவை படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

1970: போயிங் 747 விமானத்தின் முதலாவது வர்த்தக சேவை ஆரம்பமாகியது.

1973 : நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததால் 176 பேர் கொல்லப்பட்டனர்.

1980 : நோபல் பரிசு பெற்ற சோவியத் பௌதிகவியலாளர் அந்திரே சாகரொவ் மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.

1984 : கணினி மௌஸை பிரபலப்படுதுதிய அப்பிள் மெக்கின்டொஷ் கணினி  அறிமுகப்படுத்தப்பட்டது.

1987: பிலிப்பைன்ஸில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் 13 பேர் உயிரிழந்தனர்.

1992 : ஸயர் நாட்டின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.

1999 :  இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.

2006: பொலிவியாவின் முதலாவது சுதேச இன ஜனாதிபதியாக இவோ மொராயெல்ஸ் தெரிவானார்.

2007: ஈராக்கின் பாக்தாத் நகரில் சந்தையொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சுமார் 88 பேர் கொல்லப்பட்டனர்.

Post a Comment

0 Comments