புத்தளம் நகரில் மக்களின் அமோக வரவேற்பை பெற்ற, புத்தளம் நகரSri Lanka Islamic Community Portal (www.slicp.com) ஆகும். அதன் உறுப்பினர்களில் ஒருவருடனான சிறப்பு நேர்காணல்.
உலமாக்களின் இஸ்லாமிய உரைகளை ஒலிவடிவத்தில் பாதுகாக்கும் ஓர் இணையத்தளம்
நேர்காணல்.!
எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்
நசீம் ரூமி
SLICP …. இத்தளத்தின் தோற்றம் பற்றி
புத்தளத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொழும்பில் பணி செய்பவர். அவரோடு
தனிப்பட்ட முறையில் கலந்துரையாடி கொண்டிருக்கும் போதுதான் இவ்யோசனை
கூறப்பட்டது. நிறைய ஊர்களில் தங்களது உலமாக்களை கொண்டு நடாத்தப்படும் பயான்
நிகழ்ச்சிகளை பதிவேற்றும் போது, நாங்களும் அவ்வாறான முயற்சியினை செய்தால்
மக்களும் பயன் பெறுவார்கள்.
இது ஒரு சதகதுல் ஜாரிஆவாகவும் அமையும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், 2011 ஆகஸ்டு 15 ஆம் திகதியளவில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதில் பதிவேற்றிய முதல் ஒலிவடிவம் ஞாபகம் இருக்கா..
“முஸ்லிம்களின் உரிமைகளும் கடமைகளும்” என்ற தலைப்பில் உரையாற்றப்பட்ட பயான்தான் முதன் முதல் பதிவுசெய்யப்பட்டு பதிவேற்றப்பட்டது.
இயக்குனர்கள் பற்றி..
இதனை பொருத்தமட்டில் நிர்வாக கட்டமைப்பு என்று ஒன்றில்லை. நண்பர்களாக, உறுப்பினர்களாக இணைந்து செயற்படுத்தி வருகிறோம்.
இதன் விரிவாக்கம் எப்படி இருக்கிறது.
ஆரம்பத்தில் புத்தளம் நகரை மையப்படுத்தியே எமது நகர்வுகள் இருந்தன.
காலப்போக்கில் இதன் பயன்பாடு புத்தளம் நகரைத் தாண்டி மற்றவர்களுக்கும்
சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் முகநூல் ஊடாக, தெரிந்தவர்கள் ஊடாக என்று
தெரியப்படுத்தி இன்று பல ஊர்களிலும் மக்கள் பயன் அடைகின்றனர்.
அப்படி என்றால் மற்ற ஊர் உலமாக்களின் சொற்பொழிவுகள்…
பொதுவாக எமது ஊர் உலமாக்களின் சொற்பொழிவுகளை எடுப்பது எமக்கு இலகுவாக
இருக்கிறது. பள்ளிவாயல்களில், உலமாக்களிடம் அனுமதி பெற்ற பின்னர் தான் நாம்
ஒலிப்பதிவு செய்வதுண்டு. அதேநேரம் இலங்கையில் பிரசித்திபெற்ற உலமாக்களின்
பயான்களையும் எமது தளத்தில் பதிவேற்றுவோம்.
இத்தளத்திற்கான பங்களிப்பு எவ்வாறுள்ளது..
ஆரம்பத்தில் ஓரிரு ஒலிப்பதிவு சாதனங்களே இருந்தன. காலப்போக்கில் ஒரு சில
நல்மணம் படைத்தவர்கள், நண்பர்கள் தங்களால் இயன்ற சாதனங்களை தந்து உதவி
புரிந்தனர். Puttalam Association Qatar ஒரு தொகை பணத்தை நன்கொடையாக தந்து
எமக்கு ஊக்கமளித்தனர். அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்து
கொள்கிறேன்.
இதன் பாரிய அடைவாக எதனை கருதுகிறீர்கள்.
எமது ஊரில் நடைபெற்ற இரு பெருநாள் தின கொத்துபா பேருரையை நேரடி ஒளிப்பரப்பு செய்ததனை இங்கு குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.
சராசரி பதிவேற்றங்களின் எண்ணிக்கை…
ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை (சுமார் 2 1/2 வருடங்களில்) ஜும்ஆ பயான்கள் 234, பிக்ஹூ வகுப்புக்கள் 75, ஹதீஸ் வகுப்புக்கள் 87, ஏனைய/ விசேட பயான்கள் 95 என்ற விகிதத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், இத்தளத்தை தரிசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 53,855பேர்களும் உரைகளைப் பதிவிறக்கம் செய்தவர்கள் சுமார் 30,537 பேர்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மக்களுடைய பங்களிப்புகள்…
பங்களிப்புகளை பொறுத்தவரை அதிகமான பெண்கள் இதனால் பயன் அடைகின்றனர்.
அதனோடு சேர்த்து வெளிநாட்டில் வசிக்கும் எம்மவர்கள் இதன்மூலம் பயன்
பெறுகின்றனர். இத்தளத்திற்கு விஜயம் செய்பவர்கள், இதன் மூலம்
பயன்பெற்றவர்கள், தான் பயன்பெறுவதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும்
தெரியப்படுத்தினால் போதுமானதாக அமையும்.
இதன் பெறுமதி நன்மைகளாக எமக்கு கிடைத்து கொண்டிருக்கும். முகம்தெரியாத
நண்பர்கள், பெயர்சொல்ல விருப்பமில்லாத சகோதர்கள் என பலபேர் இதற்கு உதவி
புரிந்துள்ளனர்.
நன்றி; வசீம் அக்ரம், Px Online
0 Comments