Subscribe Us

header ads

அரச தகவல் மையத்துக்கு 16 இலட்சம் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

2013ம் ஆண்டு அரச தகவல் மையத்துக்கு பதினாறு இலட்சம் அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் அதிகமான அழைப்புகள் மேல் மாகாணத்தில் இருந்தே கிடைக்கப்பெற்றுள்ளன. 7 இலட்சத்து நாற்பத்து ஒன்பதாயிரத்து பத்து அழைப்புக்கள் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்கள் அதிகமாக ரயில்வே திணைக்களம், பிரதேச செயலகங்கள், பொலிஸ் திணைக்களம், மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், கல்வி அமைச்சு, போன்றவை தொடர்பிலான தகவல்களைப் பெறவே அழைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச தகவல் மையத்துக்கு கிடைத்த மக்கள் அழைப்புக்கள் எழுபத்து எட்டாயிரத்து நாற்பத்து ஐந்து.

இதேவேளை www.gic.gov.lk என்ற அரச தகவல் மையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு 2013ம் ஆண்டில் ஏழு இலட்சத்து பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பிரவேசித்துள்ளனர்.

Post a Comment

0 Comments