Subscribe Us

header ads

தெஹிவளை-கல்கிஸ்ஸை பகுதியில் 315 பேருக்கு அபாய அறிவிப்பு

தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகர சபை பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு சுற்றிவளைப்பில் 315 பேருக்கு அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், இராணுவம், பொலிஸ் சுற்றாடல் பிரிவின் பங்களிப்பில் நேற்று (19) திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது 5844 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில் 1037 இடங்கள் டெங்கு நுளம்பு பரவக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், 344 இடங்களில் தொடர்ச்சியாக டெங்கு நுளம்பு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments