Subscribe Us

வரலாற்றில் இன்று: ஜனவரி 14

1539 : கியூபாவை ஸ்பெயின் தனது ஆட்சியின் கீழ் இணைத்துக் கொண்டது.

1690 : கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.

1724 : ஸ்பெயின் மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தார்.

1761 : இந்தியாவில் மூன்றாவது பனிப்பட் சமர் ஆப்கானியர்களுக்கும் மராத்தியயர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

1784 : அமெரிக்கப் புரட்சிப் போரின்போது, ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

1814 : நோர்வேயை  மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு டென்மார்க் விட்டுக்கொடுத்தது.

1858 : பிரான்ஸின் மன்னர்; மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினார்.

1907 : ஜமெய்க்காவில் இடம்பெற்ற பூகம்பத்தால்  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

1933: அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எதிரணி துடுப்பாட்ட வீரர்களின் உடலை தாக்கும் விதமாக பந்துவீசினர்.  அவுஸ்திரேலிய அணித்தலைவ் இபில் வூட்புல் இங்கிலாந்து வீரர்டக்ளஸ் ஜார்டினின் பந்துவீச்சில் காயமடைந்தார். இது  'பொடி லைன்' தந்திரோபாயம் என அழைக்கப்பட்டது.

1943 : இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.

1950 : சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1969 : ஹவாயிற்கு அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

1994 : ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.

1998 : ஆப்கானிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

1999: கனடாவின் டொரண்டோ நகரில் ஒரு மீற்றர் உயரமான  பனிப்பொழிவு இடம்பெற்றதால்   அந்நகர மேயர் இராணுவத்தினரை உதவிக்கு அழைத்தார்.

2000: 1993  ஆம் ஆண்டு பொஸ்னிய கிராமமொன்றில் சுமார் 100 முஸ்லிம்களை கொன்ற குற்றத்தற்காக பொஸ்னிய குரோஷியர்கள் ஐவருக்கு 25 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2005 : சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.

2011: டுனீஷியாவின் ஜனாதிபதி பென் அலி ஆர்ப்பாட்டங்களையடுத்து சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றார்.

Post a Comment

0 Comments