Subscribe Us

என் வாழ்வின் அர்த்தம் காணவே இஸ்லாத்தை ஏற்றேன்! (இத்தாலிய வாலிபரின் வாக்கு மூலம்)

A.J.M மக்தூம்
வடக்கு இத்தாலியின் எமிலியா ரோமானியா மாகாணத்தில் அமைந்திருக்கும் சல்சொமட்கோராஹ் நகரில் வசித்து வரும் ஏஞ்சலோ மலார்டோ எனும் 22 வயதை அடைந்துள்ள இளம் வயது வாலிபர் ஒருவர் பின்வருமாறு கூறுகிறார்:
“நான் மூன்றாண்டு காலம் ஹோட்டல் தொழில் துறைசார் பாடநெறியை பூர்த்தி செய்த பிறகு உணவகங்களிலும், பிஸ்ஸா விற்பனை நிலையங்களிலும் வேலை செய்து வந்த போதே இஸ்லாத்தை நோக்கிய எனது பயணம் ஆரம்பமானது” என்கிறார்.
அவர் இது பற்றி தொடர்ந்தும் கூறுகையில்,  
“புகைத்தலுக்கு அடிமையாகியிருந்த நான் எனது நண்பர்களுடன் க்ளப்களில் நடனம் ஆடி காலத்தை அர்த்தமின்றி கடத்தி வந்தேன். இந்நிலையில் இஸ்லாத்தை தீவிரவாதமாகவும், கடும்போக்காகவும் தெரிந்து வைத்திருந்த நான் எனது சக பணியாளர்களான ஆப்ரிக்க நண்பர்பளிடம் இதுபற்றி வினவினேன். அவர்கள் இஸ்லாம் பற்றிய எனது தவாறான கண்ணோட்டங்களுக்கு தக்க பதில்களை வழங்கி எனது சந்தேகங்களை தெளிவு படுத்தியதோடு, மாற்றமாக இறை அன்பு, சகிப்புத்தன்மை, சமாதான சகவாழ்வின் பாலே இஸ்லாம் அழைப்பு விடுகிறது என்ற உண்மையை தெளிவு படுத்தினர். இஸ்லாத்தை சரியாக விளங்க வேண்டும் என என்னில் ஆர்வம் பிறக்க அது பற்றி தேட ஆரம்பித்தேன். அல் குர்ஆனை கற்றபோது அது எனது உள்ளத்தை தொட்டுவிட்டது. அப்போதுதான் எனது வாழ்க்கைக்கும் ஒரு இலக்கும், அர்த்தமும் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட நான் இஸ்லாத்தை எனது மார்க்கமாக தழுவிக் கொண்டேன்” என்று குறிப்பிடுகிறார்.

Post a Comment

0 Comments