இன்று தொடக்கம் எதிர்வரும் ஜனவரி 7ஆம்
திகதி வரை 76 பாடசாலைகளில் முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீ்ட்டுப் பணிகள்
மேற்கொள்ளப்படவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார கூறியுள்ளார்.
இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப்
பணிகள் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை 19
பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இம்முறை சாதாரண தரப் பரீட்சையின்
விடைத்தாள் மதிப்பீ்ட்டுப் பணிகளில் 40000 ஆசிரியர்கள்
ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்நபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும்
தெரிவித்தார்.
122 நிலையங்களில் நடைபெறவுள்ள இந்த
மதிப்பீட்டில் 1842 மதிப்பீ்ட்டுக் குழுக்கள் மொத்தமாக 110 இலட்சம்
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


0 Comments