ஜனாதிபதியின்
பணிப்பிற்கிணங்க ஏழு இலட்சம் மாணவர்களுக்கு பாதணியும் மேலதிக சீருடைத்
தொகுதியும் ஜனவரி மாதத்தில் வழங்கப்படுமென கல்விச் சேவைகள் அமைச்சு
தெரிவித்துள்ளது.இதற்கு 2500 மில்லியன் ரூபா வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென கல்விச்சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
இதுவரை வெளிநாட்டிலிருந்து பாடசாலை சீருடை இறக்குமதி செய்யப்பட்டது. இவ்வருடத்திலிருந்து உள்ளூரில் அது உற்பத்தி செய்யப்படுமென அமைச்சர் தெரிவித்தார். .
80 வீத சீருடைத் துணி உள்ளூரில் உற்பத்தியாகும். மிகுதியான 20 வீதம் துணியாக இறக்குமதி செய்யப்பட்டு வர்ணம் ஊட்டப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் துணிக் கைத்தொழிலாளர்களை முன்னேற்றும் மஹிந்த சிந்தனை திட்டத்துக்கு ஏற்ப இது நடைமுறையாகும். பாதணிகள் உள்ளூர் தோலினால் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் உள்ளூர் பாதணி உற்பத்தியாளர் நன்மை பெறுவரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

0 Comments