Subscribe Us

header ads

'நோவாவின் கப்பல்' வடிவம் தொடர்பில் புதிய திருப்பம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதங்களுடன் தொடர்புபட்ட நோவாவின் கப்பல் தொடர்பில்

இந்நிலையில் நோவாவின் கப்பல் குறித்து தற்போது நம்பப்பட்டது வடிவில் அது அமைந்திருக்கவில்லை. அது வட்ட வடிவில் அமைந்த ஒரு கப்பல் என புதியதோர் ஆராச்ய்ச்சியில் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது, கலாநிதி ஏர்வின் பிங்கிள் வெளியிட்டுள்ள 'த ஆர்க் பிபோ நோவா : டிகோடிங் த ஸ்டோரி ஒப் த ப்ளட்' எனும் புத்தகத்திலேயே இந்த பழைமையான கப்பலின் வடிவம் தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.


மொஸப்பத்தேனியர்களால் உருவாக்கப்பட்ட தொன்மையான எழுத்துருவான கியூனிபோர்ம் எனப்படும் பதிக்கப்படும் எழுத்துருக்களை (ஆப்பெழுத்து எனவும் கூறப்படும்) புலமைவாய்ந்த ஏர்வின்.  இந்த எழுத்துருக்களில் நோவாவின் கப்பல் தொடர்பில் 3700 வருடங்களுக்கு முன்னர் பல தகவல்களை களி ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. இதனை மொழிபெயர்ப்புச் செய்தன் மூலமே இந்த உணமை தெரியவந்துள்ளது.

குறித்த களி அமைப்பில் 'எனது கட்டளையின் படி நீ எப்போதும் உயிர் வாழலாம். உனது வீட்டை உடைத்து உயிரைப் பாதுகாக்க கப்பல் ஒன்றை உருவாக்கு. ஒரே அளவிலான அமைப்புகளுடன் வட்ட வடிவில் கப்பலை வடிவமைப்பாய்' என எழுதி இருப்பதாகத் ஏர்வின் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'நோவாவின் கப்பல் தண்ணீர் புகதாவாறு கயிறாலும் மரத்தினாலும் 220 அடி விட்டமும் 20 அடி உயரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 களித்துண்டுகளிலுள்ள எழுத்துருக்கள் மூலம் 2 தட்டுக்களை கொண்ட இக்கப்பலில் பல்வேறு உயிரினங்கள் வாழத்தக்க வகையில் பிரிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது.

கப்பல் கட்டுவதற்கு காரணமாக அமைந்த பாரிய வெள்ளம் குறித்தும் களி அமைப்பில் உள்ளன. தற்போதுள்ள நோவாவின் கப்பல் அமைப்பு கடலில் செலுத்தத்தக்க அமைப்பு. ஆனால் அந்த கப்பல் மிதக்கவே உருவாக்கப்பட்டது. இது தற்போதைய ஈரான் அல்லது ஈராக் பகுதியில் இடம்பெற்றிருக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சனல் 4 ஆவணப்படமொன்றை எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கப்பலுடன் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத ரீதியாக முக்கியமான தொடர்புகள் உண்டு.
அவ்வப்போது செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.

Post a Comment

2 Comments

  1. Svia lingam than kappal ,and kapa muslim, kappal drive panna siluvai+kristin.

    ReplyDelete