
1505 : பெல்ஜிய மன்னன் ஜோன் யுவான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டார்.
1642 : ஏபெல் டாஸ்மான் நியூஸிலாந்தில் காலடி பதித்த முதலாவது ஐரோப்பியரானார்.
1787 : நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.
1878: கட்டாரில் அல் தானி குடும்பம் ஆட்சிக்கு வந்தது.
1911 : சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
1926 : துருக்கி கிறகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
1935 : இலங்கை சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
1941 : ஹொங்கொங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து ஜப்பான் ஹொங்கொங் மீது படையெடுத்தது.
1944 : இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் ஜப்பானிய இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.
1958: உலகின் முதலாவது தொலைத்தொடர்பு செய்மதியா Project Score அமெரிக்காவினால் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1961 : டச்சு நியூ கினியை ஆக்கிரமித்தது.
1966 : சனி கோளின் சந்திரனான எப்பிமேத்தியஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
1973 : சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1973: இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி சவூதி அரேபியாவில் ஸ்தாபிக்கப்பட்டது.
1978: ஐ.நாவில் டொமினிக்கா இணைந்தது.
1987 : லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
1997 : எச்.டி.எம்.எல் 4.0 பதிப்பு வெளியிடப்பட்டது.
1999 : கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்தார்.
2005 : சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.
2006: மலேஷியாவில் பாரிய வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 118 பேர் உயிரிழந்ததுடன் 4 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.
2006: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதலாவது தேர்தல் நடைபெற்றது.
2010: டுனிஷியாவில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. 'அரபு வசந்த' புரட்சியின் ஆரம்பமாக இது அமைந்தது.
0 Comments