Subscribe Us

header ads

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் குறித்து கவலைகள்

அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்கான கால்பந்து
போட்டிகள் நடைபெறும்போது போராட்டங்கள் ஏதும் நடத்த வேண்டாம் என அந்நாட்டு மக்களிடம் ஃபிஃபாவின் பொதுச் செயலர் ஜெரோம் வாலெக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகள், உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை ஆகியவற்றின் பின்புலத்தில் பிரேசிலில் இந்த உலக் கோப்பை போட்டிகளை நடத்துவது மிகவும் சிரமாமகி வருகிறது என்றாலும், அந்தப் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது தவறு என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
உலகக்கோப்பை போட்டிகளின் காரணமாக பணத்தை விரயம் செய்கிறார்கள் என்று அதன் ஏற்பாட்டாளர்களின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதைக் காரணம்காட்டி பிரேசிலில் வன்முறையுடன் கூடிய பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அரங்குகள் குறித்தும் கவலைகள்

எப்போது அரங்குகள் தயாராகும் என்று கேள்விகள்
இதேவேளை அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் உலகக் கோப்பை போட்டிகள் இடம்பெறவுள்ள ஆறு விளையட்டு அரங்கங்களில் கட்டுமானப் பணிகள் முடிவுறாததால் அவை டிசம்பர் மாத இறுதிக்கு முன்னர் தயாராகாது என்று பிரேசிலில் விளையாட்டுத்துறை அமைச்சர் அல்டோ ரெபெல்லோ அறிவித்துள்ளார்.
இதில் சாவ் பாலோ நகரில் துவக்கப்போட்டி இடம்பெறவுள்ள விளையாட்டு அரங்கும் அடங்கும்.
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா கட்டுமானப் பணிகளுக்கு விதித்த காலக்கெடுவுக்குள் அந்த ஆறு அரங்குகளும் கட்டி முடிக்கப்படவில்லை.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்ட்கள் தொடங்குகின்றன.
இப்போட்டிகளின் ஏற்பாடுகள் தொடர்பில் பிரேசில் அரசும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. எதிபார்த்ததைவிட கூடுதலான நிதிச்செலவு, தாமதங்கள் ஆகியவை குறித்தே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Post a Comment

0 Comments