இதை அவர்கள் 400 ஆயிரம் ஆண்டு காலத்திய ஒரு தொடை எலும்பிலிருந்து சேகரித்ததாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஸ்பெயினின் ஒரு குகையிலிருந்து இந்த எலும்பை அவர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.
இந்த எலும்பில் கிடைத்த மரபணுக்கள், 40,000
வருடங்களுக்கு முன்னர் சைபீரியாவில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்களுடன்
தொடர்புடையதாக இருப்பதை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லட்சக் கணக்கான வருடங்ளுக்கு முன்னர் மனிதக் குரங்கு போன்ற உயிரினத்திலிருந்து எப்படி மனிதன் உருவானான் என்பதை புரிந்து கொள்ள இந்த மரபணுவை எடுக்க இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்திய வழி உதவும்.
லட்சக் கணக்கான வருடங்ளுக்கு முன்னர் மனிதக் குரங்கு போன்ற உயிரினத்திலிருந்து எப்படி மனிதன் உருவானான் என்பதை புரிந்து கொள்ள இந்த மரபணுவை எடுக்க இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்திய வழி உதவும்.
அந்த மரபணுவை விஞ்ஞானிகள் எடுக்க பயன்படுத்திய வழி குறித்த விவரங்கள் ‘நேச்சர்’ என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

0 Comments