கற்பிட்டி பிரதேசத்திலிருந்து பப்பாசி பழங்களை ஏற்றிக் கொண்டு
கொழும்பு வந்துகொண்டிருந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
புத்தளம் கொழும்பு பிரதான வீதி, காக்கப்பள்ளி பிரதேசத்திலேயே இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில், சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். லொறியில் ஏற்றிச்செல்லப்பட்ட சுமார் ஐயாயிரம் கிலோ பப்பாசிப் பழங்களில் அநேகமான பழங்கள் சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள் TM)

0 Comments