ஹம்ஷியரில் போர்ட்ஸ்மவுத் நகரில் வசிக்கும் பிலிப் பரோ என்ற நபரே, இயற்கை மரணமடைந்த தனது தாயாரான லூஸி பரோவின் உடலை சட்டப்பிரகாரம் நல்லடக்கம் செய்யாது குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.
ஆரம்பத்தில் பிலிப் தனது தாயாரை படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. எனினும், லூஸியின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் அவர் இயற்கை மரணம் எய்தியதை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் தனது தாயார் இறந்து விட்டதை மறைத்து அவரது ஓய்வூதிய அனுகூலங்களைப் பெற்றமை மற்றும் தனது தாயாரின் சடலத்தை உரிய முறையில் நல்லடக்கம் செய்யத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகள் பிலிப் மீது சுமத்தப்பட்டுள்ளன.
பிரித்தானிய சட்டப் பிரகாரம் பிலிப் தனது குற்றங்களுக்காக கால வரையறையற்ற சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடு மென தெரிவிக்கப்படுகிறது.

0 Comments