Subscribe Us

header ads

பெற்றோர்களின் கவனயீனம்!தவறுதலாக பெற்றோல் குடித்த ஒன்றரை வயது குழந்தை மரணம்.

பெற்றோலை தவறுதலாக குடித்ததில் ஒன்றரை வயது குழந்தையொன்று மரணமடைந்த சம்பவம் ஒன்று பதுளை - ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முற்றத்தில் வைத்து தந்தை இன்று திங்கட்கிழமை காலை சுத்தம் செய்து கொண்டிருக்கையிலேயே அருகில் இருந்த பெற்றோலை குழந்தை தவறுதலாக குடித்துள்ளது.

ஆபத்தான நிலையிலிருந்து குழந்தையை பெற்றோர் வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போதிலும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.

குழந்தையின் சடலம் பதுளை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments