Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று டிசம்பர் 10

1041 : பைசண்டைன் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல்

1541 : இங்கிலாந்தின் மன்னன் எட்டாம் ஹென்றியின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமஸ் கல்பெப்பர்ம் பிரான்சிஸ் டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1655 : யாழ்ப்பாண ஆளுநர் 'அன்டோனியோ டி மெனேசா' மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டார்.

1684 : ஐசக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ரோயல் சபையில் வாசிக்கப்பட்டது.

1868 : உலகின் முதலாவது சமிக்ஞை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.

1898 : ஸ்பெயின், அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாடு பாரிஸில் கைச்சாத்திடப்பட்டது.

1901 : முதல் தடவையாக நோபல்  பரிசு வழங்கப்பட்டது.

1902 : அவுஸ்திரேலியாவின் தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.

1906 : அமெரிக்க ஜனாதிபதி தியோடோர் ரோஸ்வெல்ட் சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.

1936 : இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்ட் மன்னன் முடி துறப்பதாக அறிவித்தார்

1941 : இரண்டாம் உலகப் போரில் மலாயாவுக்குக் அருகில் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் ஜப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டது.

1941 : இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியப் படைகள் பிலிப்பைன்ஸை அடைந்தன.

1948 : மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.

1968: ஜப்பானின் டோக்கியோ நகரில் வங்கியொன்றின் வாகனமொன்றிலிருந்து 30 யென் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஜப்பானில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் இதுவாகும்.

1978: எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத், இஸ்ரேலிய பிரதமர் மெனாசெம் பெகின் ஆகியோருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.

1981 : தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பொதுச் சபை ஏற்றுக் கொண்டது.

1984 : தென்னாபிரிக்க கறுப்பின மதகுரு டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

1989 : மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
என்ற பெயரில் கிழக்கு ரோம இராச்சியத்தின் பேரரசனாக்கினாள்.

Post a Comment

0 Comments