பிரிட்டனின் ராணி எலிசபெத்தின் முந்திரி பருப்புகளை பொலிஸ் அதிகாரிகள்திருடி தின்று விடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அரண்மனையில் ராணி எலிசபெத்தின் போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டது தொடர்பான மின்னஞ்சல்கள் விசாரணைக்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மின்னஞ்சலில், அரண்மனையில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள், ராணிக்கு வைத்திருக்கும் முந்திரி பருப்பை திருடி தின்று விடுவதாக எலிசபெத் எரிச்சலடைந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, அவர்களை கையும் களவுமாக பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று
உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனை படித்து பார்த்த
நீதிபதிகள் சிரித்ததுடன், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று
தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து பொலிஸ் அதிகாரிகளோ, அரண்மனை நிர்வாகமோ
கருத்துகூற மறுத்துவிட்டது.

0 Comments