Subscribe Us

அரசாங்க அமைச்சர் றிசாட் பதியுதீன் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

இடம்பெயர்ந்த நிலையில் உள்ள முஸ்லிம்களை துரிதமாக மீள்குடியேற்றாவிட்டால், இந்த விடயம் பூதாகரமாக வெடிக்கும் என்று அரசாங்க அமைச்சர் றிசாட் பதியுதீன் எச்சரித்துள்ளார். கடந்த 22 வருடங்களாக இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

அவர்களை மீள்குடியேற்றம் செய்வதில் அரசாங்கம் பாராமுகமாக இருக்கிறது. இந்தியாவினால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத் திட்டமும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை.இந்த நிலையில் முஸ்லிம் மக்களை துரிதமாக மீள்குடியேற்றாவிட்டால், பாரிய சிக்கல்களை அரசாங்கம் சந்திக்க வேண்டி ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments