Subscribe Us

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 19

1154: இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் ஹென்றி முடிசூடினான்

1606 : ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.

1871 : யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள்  வழங்கப்பட்டன.

1877 : யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்தனர்.

1907 : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 பேர் கொல்லப்பட்டனர்.

1916 : முதலாம் உலகப் போரில் பிரான்ஸில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.

1941 : அடோல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத்தின் தளபதியானார்.

1961 : போர்த்துக்கேய குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.


1963 : ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சான்சிபார் சுதந்திரம் பெற்று சுல்தான் ஹமூட் பின் முஹமட் தலைமையில் முடியாட்சியைப் பெற்றது.

1967 : இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன அவுஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
1972 : சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17  பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.

 1983 : உலகககிண்ணக் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளில் சம்பியன் அணிக்கு வழங்கப்படும் அசல் ஜுலேஸ் ரிமேட் கிண்ணம் பிரேஜிலில் அந்நாட்டு கால்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது. இக்கிண்ணம் மீண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை.

1984 : ஹொங்கொங்கின் ஆட்சியை ஜூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியாவோபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.

1986 : சோவியத் எதிர்ப்பாளியான அந்திரேய் சாகரொவ் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

1997 : இந்தோனேசியாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.

1997 : ஜேம்ஸ் கெமரூன் இயக்கிய டைட்டானிக் திரைப்படம் வெளியானது.

 2001: ஆர்ஜென்டீனாவில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

 2012: தென்கொரியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக பார்க் குவென் ஹை தெரிவானார்.

Post a Comment

0 Comments