சிங்கள பெளத்தர்களையும், தமிழர்களையும் அழித்து முஸ்லிம் தீவிரவாதத்தினை நாட்டில் பரப்பும் செயலுக்கு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும். ஒரே நாளில் எம்மால் ஆட்சியை மாற்றி நாட்டை சுத்தம் செய்ய முடியும். ஆனால் பெளத்த தர்மம் எம்மை சுமக்கின்றமையாலேயே நியாயமாக போராடுகின்றோம் என பொதுபலசேனா பெளத்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் அழுத்தத்தினை கொடுக்கும் சிறந்ததொரு எதிர்க்கட்சி இலங்கையில் இல்லை. ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு ஒரே நாளில் அழிந்து விடும் எனவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு
தெரிவித்தனர்.இது தொடர்பாக பொதுபலசேனா பெளத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் இன்று முஸ்லிம் தீவிரவாதம் பரவிக்கொண்டிருக்கின்றது. பெளத்தர்கள், தமிழர்களின் இனப்பெருக்கத்தையும் விடவும் பலமடங்கு முஸ்லிம்கள் இலங்கையில் இருக்கின்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் தீவிரவாதக்காரர்களுக்கும் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் இலங்கையில் இடமளிக்கக்கூடாதென நாம் குறிப்பிட்டும் அரசாங்கம் கவனத்திற் கொள்வதாகத் தெரியவில்லை.
அரசாங்கத்தின் அலட்சியமான ஆட்சி முறையினால் இன்னும் சில ஆண்டுகளில் பெளத்த மதம் அழிவடையும். மத்திய கிழக்கில் இருந்து தற்போது சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக முஸ்லிம் குடும்பங்கள் வந்துள்ளன. இவர்களின் தீவிரவாதக் கொள்கையினை இங்குள்ள அப்பாவி முஸ்லிம் சமூகத்தினரிடமும் பரப்பி அவர்களையும் பிரிவினைவாதிகளாக்குவதே அவர்களின் முக்கிய குறிக்கோளாகும். இதனை ஜனாதிபதி புரிந்து கொள்ளாது தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தக்கூடாது.
அதேபோல் நாட்டில் ஓர் பிரதான மதக் கொள்கையினை வைத்தே ஆட்சி நடத்த வேண்டும். இங்கு பல மதத்தவர் வாழ்ந்தாலும் பெளத்தத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்த அரசாங்கத்திலும் ஒருவரும் இல்லை சிறந்ததொரு எதிர்க்கட்சியும் இல்லை.
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து நாட்டின் இறைமையை பாதுகாத்து செயற்பட வைக்கும் எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி செயற்படவில்லை. அவர்களின் கட்சி சிக்கல்களையும் சர்வதேச உறவுகளையுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்போதே இவ்வாறான நிலைமையென்றால் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி நடத்தினால் ஒரே நாளில் நாடு அழிந்து விடும்.
நாம் நினைத்தால் ஒரே நாளில் அரசாங்கத்தினை மாற்றி அமைத்து பெளத்த மதத்தினையும் சிங்களவர்களையும் காப்பாற்ற முடியும். ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைத்து செயற்பட முடியும். அதேபோல் ஒரு வேளை நாம் ஆட்சியமைத்தால் நாட்டின் நிலைமையினை மாற்றிக்காட்ட முடியும். ஆனால் நாம் அதை எதிர்பார்க்கவில்லை. பெளத்த தர்மத்தின் படியே நாம் செயற்பட்டு வருகின்றோம்.

0 Comments