Subscribe Us

header ads

கலைகளில் வடமேல் மாகாணம் முதலிடத்தைபெற நடவடிக்கை எடுக்கப்படும்

எம்.எஸ்.முஸப்பிர்
நாடக உப-சபை ஒன்றை ஆரம்பித்து கலை நடவடிக்கைகளில் வடமேல்

வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வடமேல் மாகாண அரச விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 11 வருடங்களாக இந்த நாடக விழா இரு விழாக்களாக இடம்பெற்று வந்துள்ளன.

எனினும், நாடகப் போட்டி மற்றும் அரச நாடக விழா ஆகிய இரண்டையும் ஒரே விழாவாக நடத்துவதற்கு நாம் தீர்மானித்துள்னோம்.

நாடகக் கலை என்பது இன்று வெற்றிகரமான ஒரு துறையல்ல. ஒரு நாடகத்தைத்  எழுதி, தயாரித்து அரங்கேற்றுவதற்கு நிறைய பணம் தேவைப்படும்.  பணத்தைத் தேடி ஒரு நாடகத்தை அரங்கேற்ற நாட்கள் எடுக்கும். வடமேல் மாகாணம் என்பது கலைஞர்கள் அதிகம் வாழும் ஒரு பிரதேசம்.

பொருளாதார பிரச்சினைகள், பொருளாதார ரீதியில் கலைஞர்கள் எதிர்நோக்கும் செலவுகள், கலைஞர்களுக்கு இடமின்மை போன்ற காரணங்களினால் கலைஞர்களுக்கு முன்னேற உள்ள சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகின்றது' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாகாணத்தை இலங்கையின் முன்னணி மாகாணமாகக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.

Post a Comment

0 Comments