Subscribe Us

header ads

சிறந்த ஊழியர்களுக்கான மிகச் சிறந்த ஒன்பது பண்பியல்புகள்

ஒர் சிறந்த ஊழியர் என்பவர் எல்லோரையும் சார்ந்திருப்பவனாக, நம்பிக்கைக்கு பாத்திரமானவராக, சூழ்நிலைகளை தகுந்த கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பராக, சிறந்த ஒர் அணி அல்லது குழுவின் முன்னெடுப்பாளனாக, வலிமையான பணி நெறிமுறைகளின் கீழ் ஒழுகுபவனாக இருத்தல் வேண்டும் என்பது எல்லோரு ம் அறிந்த விடயமாகும். இவ்வாறான இயல்புகளைக் கொண்ட ஊழியரை உண்மையான மிகவும் சிறந்ததோர் ஊழியர் என்ற அடுத்த நிலைக்கு இட்டுச் செல்கின்ற, பெரும்பாலும் கவனிக்கப்படாத (மற்றும் குறிப்பிடப்படாத செயல்திறன் மதிப்பீடுகள்) அவருடைய செயல்திறன் மீது ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்குகின்ற பண்பியல்புகளாகும்.
அவ்வாறான குணங்களில் சிறந்த ஒன்பது பண்பியல்புகள் பின்வருமாறு
  • மற்றையவர்களிலிருந்து சிறு விலகல்
மிகச் சிறந்த ஊழியர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபாடானவர்களாகக் காணப்படுகின்றனர். நகைச்சுவையான பேச்சு, வழக்கத்திற்கு மாறான மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல், சில நேரங்களில் மற்றவர்களால் மரியாதைச் செயப்படுகின்ற விடயத்தின் மீது அல்லது நபரின் மீது மதிப்பளிக்காமை போன்ற செயற்பாடுகள் கொஞ்சம் விலகலாக செல்வதாகத் தெரிந்தாலும் ஆனால் அவற்றை நல்ல முறையிலே வெளிப்படுத்துவர். வழக்கத்திற்கு புறம்பான ஆளுமைகள் (Unusual personalities) விடயங்க்களை முன்னுக்கு கொண்டுவர உதவுவதுடன், செய்யும் வேலையை கலகலப்பாக்கி, சுவைபட செல்கின்ற ஒரு நுட்பத்திறனுள்ள அணியாக வளர்ச்சிப் பெற வழிகோல்கின்றது. இவர்கள் தங்கள் திறமைகளை பல்வேறு மட்டங்களிற்கு விரிவடையச் செய்கின்றதுடன் எந்த நிலைகளிலும் சவால்களை எதிர் நோக்கின்ற வல்லமைப் படைத்தவர்களாகவும் புதிய புதிய யோசணைகளை முன்வைப்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.
  • · எப்பொழுது தொழிற்பட வேண்டும் என்பதை அறிந்து வைத்திருத்தல்
ஒரு தரநிலையற்ற ஆளுமை அது இல்லாத வரை மிகவும் கலகலப்பாக இருக்கும். கடுமையான சமயங்கள், விசித்திரமான நேரங்க்களில் தான் பெரிய சவால்கள் தலையெடுக்கின்றன, அல்லது அவ்வகையான சூழ்நிலைகள் ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இச்சந்தர்ப்பத்தில் மிகச்சிறந்த ஊழியர்கள் தமது தனித் தன்மைகளை வெளிப்படுத்துவார்கள். அதாவது எப்போது விளையாட்டுத் தனமாக இருக்க வேண்டும், எப்போது கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும், எப்போது செயற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும், எப்போது ஓய்வாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து தான் சார்ந்த அணிக்கும், நிறுவனத்துக்கும் பலமாக அமைவர்.
  • பணி விபரத்தை (job description ) தவிர்த்தல்
ஒரு சிறிய நிறுவனத்தில் தொழில் புரியும் ஊழியர் நிறுவனத்தில் தனது நிலை அல்லது தான் செய்ய வேண்டிய வேலையின் பாத்திரம் என்பவற்றைப் பொருட்படுத்தாது சுயமாகச் சிந்தித்து எந்த பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அது எந்த வேலையாக இருந்தாலும் அதனை செய்து முடிக்கிற திறமை ஒரு சிறந்த ஊழியரிடம் இருக்கின்றது.
  • மற்றவர்களுடைய தவறுகளை நிரூபிக்க ஆர்வமாக இருத்தல்
செய்யும் காரியங்களில் சந்தேகத்துடன் இருப்பவர்களால் தவறுகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்க்கள் அதிகமாக இருக்கும். இதனைச் சுட்டிக் காட்டுகின்ற உந்துதல் சிறந்த ஊழியரிடம் அடிகடி எழும். கல்லூரி படிப்பை முடிக்காத ஒரு பிள்ளை அல்லது தன்னிடம் தலைமைத்துவத்திற்கான ஆற்றலில்லை என்று சொல்லும் ஒரு நபர் இவ்வாறான இயல்புகளைக் கொண்டிருக்க முடியும். கல்வி, அறிவு, திறமை, திறன் போன்றவை முக்கியமாக இருக்கின்றது, ஆனால் அதனை முன்னெடுக்கும் தன்மை மிகவும் முக்கியமானதாகும்.
  • மற்றையவர் முன்னிலையில் புகழ்தல்
சக ஊழியன் ஒருவருடைய பாராட்டை விட, சில விடயங்கள் ஒருவருக்கு மன உறுதியையும் ஆர்வத்தையும் கொடுக்கவல்லது. உதரணமாக, ஒரு குழு அமைப்பாக தொழில் புரியும் ஒரு நிறுவனத்தில், சக பணியாளர் ஒருவருடைய பங்களிப்பு மகத்தானதாகக் காணப்படுமிடத்து அவரை தனிமையில் பாராட்டுவதை விட மற்றையவர் முன்னிலையில் பாராட்டுவதே சிறந்ததாகும். ஆகவே சிறந்த ஊழியர் ஒருவரால் இதனைச் சரியாக உணர்ந்து, சரியான நேரத்தில், சரியான வார்த்தைப் பிரயோகத்தால் இத்தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
  • பிரத்தியேகமாக அல்லது தனிப்பட்ட முறையில் முறைப்பாடுகளைத் தெரிவித்தல்
எல்லோரும் விருப்புவது ஊழியர்கள் பிரச்சினைகளை எழுப்புவதை, ஆனால் சில சிக்கல்களை தனிப்பட்ட முறையில் கையாளப்படுவது தான் சிறந்ததாக இருக்கும். இவ்விடயங்களை மேலதிகாரிகளுக்குக் கொண்டுச் செல்வத்தில் சிறந்த ஊழியர் மிகச் சிறந்த கைதேர்ந்தவர்களாக இருப்பர். ஏனெனில் அவர்களுக்குத தெரியம் எப்படி, எங்கே, எச்சந்தர்ப்பத்தில் இப்படிப்பட்ட தர்க்கத்திற்குரிய அல்லது ஆட்சபனைக்குரிய விடயங்களை முன்வைக்கப்பட வேண்டும் என்று. உதாரணமாக, ஒரு நிர்வாகத்திற்கும், பணியாளர்களுக்கிடையிலான கூட்டமர்வில் உணர்ச்சிபூர்வமான விடயம் குழுநிலையில் முன்வைக்கும் போது, அது பல கிளர்ச்சியை ஏற்படுத்த முடியும். ஆனால், இக் கூட்டத்தின் பின் நிர்வாகத்தை அணுகி அவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசிக்க கூடியவர்கள் தான் சிறந்த பணியாளன். இதற்கான் சுதந்திரத்தை அவனுக்கு அளிப்பது எதுவெனில் அவனுடைய சிறந்த செயல்திறன் தான். இதனால் நிறுவனத்தின் தேவையற்ற தூண்டல் நிலை தவிர்க்கப்படுவதுடன், வர்த்தக மேம்பாட்டுக்கும் உதவியாக இருக்கும்.
  • மற்றவர் சார்பாக வினாக்களைக் கேட்டல்
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் சபையில் பேச தயக்கமுடையவர்களாகவும், இன்னும் சிலர் தனிப்பட்ட முறையில் சந்தித்து கதைப்பதற்குகே பின்னிற்பவர்களாகவும் இருககின்றார்கள். இப்படிப்பட்டவர்களால் தங்களது தேவைகளைத் தெரிவிக்கவும,; கேட்கவும் இயலாதவர்களாகக் காணப்படுகின்றனர், இதனால் பலவிடயங்கள் தெரிய வருவதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தில்; பணிப்புரியும் பலருக்கு பணிநீக்கம் கொடுக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில், இது எதற்காக என்ற தகவல்கள் அறியாதவர்களாக அனேகர் இருப்பார்கள். எனவே சிறந்த ஊழியன் அவர்கள் சார்பாக தனிப்பட்டமுறையிலோ, நிர்வாகக் கூட்டங்களிலோ கேள்விகளைத் தொடுத்து பதில் தேடும் இயல்பினனாகத் திகழ்கின்றனன்.
  • சரியான நேரத்தில் தொழில் தொடங்குதல்
சரியான நேரத்தில் தொழில் தொடங்குதல் என்பது, அலுவலகத்தில் வந்து தனது இருக்கையில் அமர்ந்து சரியான நேரத்திற்கு தனது பணியைத் தொடர வேண்டும். பணிநேரங்களில் அரட்டையில் ஈடுபடுத்தல், தேனீர் அருந்துதல், சொந்;த வேலைகளில் தங்களை உட்படுத்துதல், போன்ற செயற்பாடுகளைத தவிர்த்து நிறுவனத்திற்கு உண்மையானவர்களாகவே சிறந்த ஊழியர்கள் தொழிற்படுவர்கள்.
  • மாற்றங்களை உருவாக்குதல்

மக்களில் சில பேரை ஒரு நல்வழியில் திருப்திப்படுத்துவது என்பது மிக கடினமானதாக இருக்கும். அவர்கள் ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள் அதாவது அறிக்கையை மீளசெய்தல், ஒரு செயல்முறையை திடீரென மாற்றி மாற்றி செய்தல், வித்தியாசம் விதியாசமான வேலைகளின் செயன்முறைகளினூடாக தொடர்ச்சியாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். மிகச் சிறந்த ஊழியர் செய்யும் தொழிலின் தொடர்த்தன்மையை ஒரு படி முறையினூடாக செய்வதன் மூலம் சிறந்ததான பெறுபேறுகளை நிறுவனத்துக்குப் பெற்றுத்தரக்கூடியவர்களாக இருப்பர்.
By: S.A Jabeer

Post a Comment

0 Comments