Subscribe Us

header ads

மண்டேலாவின் நினைவு அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளும் அமெரிக்க ஜனாதிபதிகள்

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதியும் சரித்திர நாயகனுமான நெல்ஸன் மண்டேலாவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஜோர்ஜ். எச்.டபள்யூ. புஷ் தவிர உயிருடனுள்ள அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளும் தென் ஆபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

டிசெம்பர் 15 ஆம் திகதி மண்டேலா அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் ஜொஹன்னஸ்பேர்க்கிலுள்ள கால்பந்தாட்ட மைத்தானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நினைவு அஞ்சலி நிகழ்விலேயே இவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தற்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா, அவரது மனைவி மிஷெல் மற்றும் முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் டபள்யூ புஷ், அவரது பாரியார் ஆகியோர் ஒன்றாக பயணிக்கின்றனர். இதனை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதியான பில் கிளின்டன், அவரது மனைவி ஹிலாரி மற்றும் முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி காடர், அவரது மனைவி ஆகியோர்ஒன்றாக பயணிக்கவுள்ளனர்.

இதேவேளை தற்போது உயிருடனுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான 89 வயதான ஜோர்ஜ் எச்.டபள்யூ. புஷ் சுகயீனம் காரணமாக கலந்துகொள்ளமாட்டார் என அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments