தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதியும் கறுப்பின மக்களின் சுதந்திரப் போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலாவின் பூதவுடல் எதிர்வரும் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியாக 3 நாட்கள் மக்களின் அஞ்சலிக்காக ஊர்வலமாக கொண்டுசெல்லப்படவுள்ளது.
தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியா பிராந்திய நகரங்களில் இந்த ஊர்வலம் இடம்பெறவுள்ளது. இதன்மூலம்இ மில்லியன் கணக்கான மக்கள் தமது மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்த வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நெல்சன் மண்டேலாவின் இறுதிக்கிரிகைள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்க அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது.
நெல்சன் மண்டேலாவின் இறுதிக்கிரிகைள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்க அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது.

0 Comments