'பாஸ்ட் அன்ட் பியூரியஸ்' திரைப்படப் புகழ் ஹொலிவூட் நடிகரான போல் வோகர், லொஸ் ஏஞ் சல்ஸ் நகருக்கு அருகில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தமை தொடர்பான அதிர்ச்சியிலிருந்து அவரின் ரசிகர்களும் ஹொலி வூட் நட்சத்திரங்களும் இன்னும் விடுபடவில்லை.அதேவேளை, இவ்விபத்து இடம்பெற்றபோது காரோட்டப் பந்தய மொன்றில் போல் வோகர் ஈடுபட்டிருந்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
40 வயதான போல் வோகரும் அவரின் நண்பரும் தொழிற்சார் காரோட்டப் பந்தய வீரருமான ரோஜர் ரொடாஸும் (38) ஹையான் சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி திரட்டல் நிகழ்வொன்றில் பங்கு பற்றிய வேளை ஆடம்பர போர்ஸ்ச் காரொன்றில் 'ஓர் சுற்று' சுற்றிவிட்டு வருவதற்காக சென்றதாகத் தெரிவிக்கப்படுகி றது.
ஆனால் அக்கார் புறப்பட்டு சில நிமிடங்களில் மின்கம்பமொன்றிலும் மரமொன்றிலும் மோதி தீப்பற்றி எரிந்தது. அதற் குள் சிக்கிய போல்வோல்கரும் ரோஜர் ரொடாஸும் அடையாளம் தெரியாதளவு தீக்கிரையாகினர்.
வேகமான காரோட்டக் காட்சிகளைக் கொண்ட 'பாஸ்ட் அன்ட் பியூரிஸ்' திரைப்பட வரிசையில் 6 படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இவற்றில் முதல் படத்தை தவிர ஏனைய 5 படங்களிலும் போல் வோகர் நடித்தார். இவ்வரிசையின் 7 ஆவது படத் தின் படப்பிடிப்பு நடைபெற்றுகொண்டிருந்த காலத்திலேயே போல் வோகர் விபத்தில் பலியாகியுள்ளார்.
திரைப்படத்தின் வேகமான காரோட்டக் காட்சிகள் படத்தின் வசூலையும் அதில் நடித்தவர்களின் புகழையும் வெகுவாக உயர்த்தியது. ஆனால்இ நிஜத்தில் ஒரு வேகமான காரோட்டம் போல் வோகரின் உயிரை பறித்துவிட்டது.
விபத்து இடம்பெற்ற வேளை இந்த காரை காரோட்டப் பந்தய வீரரான ரோஜர் ரொடாஸ்தான் செலுத்தினார்.
இவ்விபத்து இடம்பெற்ற பகுதி சட்டவிரோத காரோட்டப் பந்தயங்களுக்கு
பிரசித்தமான இடமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 1.6 கிலோமீற்றர்
நீளமான அந்த வீதிப்பகுதியானது விடுமுறைத் தினங்களில் போக்குவரத்து
மிகக்குறைந்த ஒரு வீதியாக இருக்கும் எனவும் பந்தய சாரதிகள் பலரால் அறியப்பட்ட இடம் அதுவெனவும் கலிபோர்னியா மாநில போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
அவ்வீதியில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணித்தியாலத்துக்கு 45 மைல் (72கி.மீ.) என்பதைக் குறிக்கும் சமிக்ஞைப் பலகையொன்றையும் போல் வோகரின் கார் மோதி சாய்த்தமை
குறிப்பிடத்தக்கது.
இவ் விபத்தின்போது மற் றொரு வோகர்இ ரொடாஸ் பயணித்த காருடன் மற்றொரு காரும் பந்தயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சிலரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் இல்லையென பொலிஸார் கூறுகின்றனர். இப்பயணத்தின்போது வோகரும் ரொடஸும் காரோட்ட பந்தயத்தில் ஈடுபட்டனர் என்ற கூற்றை அவரின் சகோதரியும் மறுத்துள்ளார்.
எனினும் அதிக வேகமே இவ்விபத்துக்கு காரணமாகியது என பொலிஸார் கருதுகின்றனர்.

போல் வோகர் திருமணம் செய்யாத போதிலும் ரெபேக்கா மெக்பிரைன் எனும் பெண் மூலம் தனது 25 ஆவது வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானவர் அவர். அக்குழந்தைக்கு தற்போது 15 வயதாகிறது. கடந்த 6 வருடங்களாக அவர் ஜெஸ் மின் எனும் 23 வயதான யுவதியை காதலித்து வந்தார். போல் வோகரின் திடீர் மரணத்தால் ஜெஸ்மின் மிகவும் நொறுங்கிப் போயுள்ளாரென அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாஸ்ட் அன்ட் பியூரிஸ் படவரிசையால் போல் வோகர் அதிக பிரபலமடைந்த போதிலும் அவர் 1986 ஆம் ஆண்டு முதல் 30 இற்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 ஆவது பாஸ்ட் அன்ட் பியூரியஸ் படம் கடந்த மே மாதம் வெளியாக பெரு வெற்றி பெற்றது. அதன்பின் அவர் நடித்த 'ஹவர்ஸ்' திரைப்படம் விரை வில் வெளியிடப்படவுள்ளது. போல் வோகர் நடித்த 'பிளெக் மேன்ஷன்' படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியாகவு ள்ளது.
அதேவேளை பாஸ்ட் அன்ட் பியூரிஸ் படத்தின் 7 ஆவது பாக த்தின் படப்பிடிப்புகள் இன்னும் எஞ்சியுள்ள நிலையில் போல் வோகர் இல்லாமலேயே முன் னெடுத்துச் செல்வதா என்பது குறித்து அதன் தயாரிப்பாளர்கள் ஆராய்கின்றனர்.
ஜூலை மாதம் இப்படத்தை வெளியிட முன்னர் திட்டமிடப் பட்டிருந்தது. போல் வோகரின் அகால மரணத்தால் இப்படத் தயாரிப்பில் மாற்றங்கள் ஏற்ப டுமா என்பது தெரியவில்லை.

0 Comments