கணவன் தாக்கியதில் அவரது மனைவி பலியான சம்பவமொன்று வென்னப்புவ, வைக்கால்
தம்பரவில எனுமிடத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இவ்விருவருக்குமிடையில் இன்று அதிகாலை முதல் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் பின்னரே மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
38 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 42 வயதான சந்தேக நபர் தனது மனைவியை கை மற்றும் கால்களில் கடுமையாக தாக்கியதுடன் கூரிய ஆயுதம் ஒன்றினாலும் தாக்கியே கொலை செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான கணவரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த வென்னப்புவ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

0 Comments