பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் பாடசாலைகளில்
முஸ்லிம்கள் அறபு மொழி கற்கவும், முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கும் அனுமதி
வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.
பிரான்ஸ், அதன் குடியேறிய மக்களை
சிறப்பாக ஒருங்கிணைக்க கண்டிப்பாக மதச்சார்பின்மையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும்
அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கீழத்தேய அரபு மொழி மற்றும் கலாச்சாரங்களின் பரிணாமத்தையும் பிரான்ஸ்
அங்கீகரிக்க வேண்டும் எனவும் மேலும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்
பட்டுள்ளது. ஊர் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்றுவது, அதன் வரலாறு பாடத்திட்டத்தை
மாற்றியமைத்தல், புலம்பெயர் கலாச்சாரங்களின் பங்களிப்பினைப் பாராட்ட குறித்த நாள்
ஒன்றை ஏற்பாடு செய்தல் போன்றன இதற்கு உதாரணங்களாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளமை
குறிப்பிடத் தக்கது.
இது இனவாதத்தை ஒழிக்கவும், சமத்துவத்தை மேலோங்க செய்யவும் சிறந்த நடவடிக்கையாக
கருதப் படுகிறது.


0 Comments