Subscribe Us

header ads

கற்பிட்டி கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நாளை.

(KV நிருபர்)
மட்டுப்படுத்தப்பட்ட கற்பிட்டிக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளைச் சங்க உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இம்மாதம் 18ஆம் திகதி புதன் கிழமை (நாளை) நடை பெறவுள்ளதாக கற்பிட்டிப் பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி இணைப்பாளர் கே.ஏ. சுமேத தெரித்தார்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மணுத் தாக்கல் கடந்த 09ம் திகதி கற்பிட்டி சின்னக்குடியிருப்பு, பெரியக் குடியிருப்பு, குறிஞ்சுப்பிட்டி, கண்டல்குழி, வெல்லங்கரை, முஸல்பிட்டி, முதலைப்பாளி, தலவில, ஏத்தாளை, நுரைச்சோலை, மாம்புரி மற்றும் தழுவை ஆகிய கிளைகளில் நடைபெற்றது.

தற்போதையப் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நிதி மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள இக்கால கட்டத்தில் நடைபெறும் இத்தேர்தல் மிகுந்த போட்டி நிறைந்ததாகக் காணப்படும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments