Subscribe Us

header ads

நெருக்கடிக்குள் சிக்கியுள்ள அரசு! அவசர ஒன்றுகூடலுக்கு ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அழைப்பு

நாட்டில் சமகால அரசியலில் ஏற்பட்டிருக்கும் பல நெருக்கடிகள் குறித்து ஆராய  அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் போயா தினமான திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளது.

இதில், இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னாபிரிக்கா மற்றும் கென்யாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திருப்பும் ஜனாதிபதி  , முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் வரவுசெலவுத்திட்டங்கள் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டு வருவது அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.

அத்துடன், போதைப்பொருள் கொள்கலனுக்கு அனுமதிக் கடிதம் கொடுத்த பிரதமருக்கு எதிராக கிளம்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் இதில் ஆராயப்படவுள்ளது.

பௌத்தர்களின் வழிபாட்டுக்குரிய நாளாக கருதப்படும் பெளர்ணமி நாளன்று  விடுமுறை நாளாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் பெளர்ணமி நாளில் அமைச்சரவை கூடவுள்ளது இதுவே முதல்முறையாகும்.

நெருக்கடிகள் அதிகரித்துள்ளால், புனித நாளிலும் மஹிந்த இந்த அவசர சந்திப்புக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments