சிறீலங்கா அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிராகரித்து வருவதாக தொடர்ச்சியான
செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவர்களது தவறுகளை
நியாயப்படுத்தும் தரப்புகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றன.
ஆயினும், உண்மைத் தன்மைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கசியவிடும்
தகவல்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் நிலவுவதாக தாயகச் செய்திகள்
தெரிவிக்கின்றன. மாகாணசபை முறைமை மூலம் எதனையும் பெறமுடியாது என தமிழ்த்
தேசிய சக்திகள் தெரிவித்த போதும், அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
தற்போது வரலாற்றில் எதுவுமே தெரியாதது போல், மாகாணசபை அதிகாரத்தை
தரவில்லை, எமது செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக அரசாங்கம் இருப்பதாக
மாகாண சபை முதல்வரும் மாகாணசபை உறுப்பினர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இது உண்மையிலேயே தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
மற்றுமொரு நடவடிக்கையென யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்துடன் தொடர்புடைய
விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறீலங்கத அமைச்சர்களே முட்டுக்கட்டை போடுவதாகவும் சிறீலங்கா
ஜனாதிபதியுடன் கதைத்து மாகாணசபை மூலம் பயனடையலாம் என்று முதலமைச்சர்
விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments