(VK)
இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'விபசாரியாக வேலை செய்ய
பெண்கள் தேவை' என்ற விளம்பரம் ஒன்றை வெளியிட்டு தனியார் நிறுவனம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் சுற்றுலா அல்லது வேலை நிமித்தமாக தனியாக வரும் ஆண்கள்
மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும், அவர்களை அவர்கள் விரும்பும்
இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நபர்களாக செயல்படும் 'எஸ்காட்' சேவை செய்து
கொடுக்கும் நிறுவனமான இங்கிலாந்தில் இயங்கிவரும் 'ஹார்னி எஸ்கார்ட்ஸ்'
என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று அரசின் வேலைவாய்ப்பு துறையின்
அதிகாரபூர்வ இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
மேற்கண்ட நிறுவனத்தில், 'தங்களுக்கு வசதியான வேலை நேரங்களில் பணியாற்ற
பெண்கள் தேவைப்படுகிறார்கள். அடிப்படை தகுதியாக உடலுறவு வைத்துக் கொள்வதில்
விருப்பம் இருந்தால் போதும். விருப்பம் உள்ள பெண்களுக்கு ஒரு மணி
நேரத்துக்கான சம்பளமாக 10 பவுண்கள் வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில்
கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின்
அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தை ஆதரித்தும், எதிர்த்தும்
லண்டன் வாசிகளிடையே தற்போது சூடான பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.

0 Comments