(VK)
காரொன்றால் மோதுண்டு உயிரிழந்த தனது நண்பனான நாயை இரவு முழுவதும் உடலை
உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாது நாயொன்று காவல் காத்த
நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
நிங்ஸியா ஹுயி பிராந்தியத்தில் யின்சுவான் நகரில் சனசந்தடி மிக்க
வீதியில் இனந்தெரியாத நபரொருவரால் செலுத்தப்பட்ட காரால் மோதுண்டு
குறிப்பிட்ட நாய் உயிரிழந்துள்ளது.
இந் நிலையில் அந்த நாயின் உடலின் அருகில் –13 பாகை செல்சியஸ் அளவான
உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாது மற்றைய நாய் காவல்
இருந்துள்ளது.
நாயின் பரிதாப நிலையை அவதானித்த அப் பிராந்தியத்திலுள்ள
உணவகமொன்றைச் சேர்ந்த ஊழியர்கள் அதனை அருகிலிருந்த பூங்காவிற்கு
அருகிலுள்ள மரமொன்றுக்கு அருகில் புதைத்தனர்.
உணவக ஊழியர்கள் நாயின் உடலைப் புதைக்கும் வரை மற்றைய நாய் அங்கு நகராமல் இருந்துள்ளது.





0 Comments