2014 ஆம் ஆண்டு சமூக அமைதியினதும் இன ஐக்கியத்தினதும்
ஆண்டாக திகழ வேண்டும் என வடமாகாண சபையின் உறுப்பினரும், எதிர்கட்சியின் பிரதம கொறடாவுமான றிப்பகான் பதியுதீன் தெரிவித்திருக்கின்றார்.
பிறக்கவுள்ள 2014 ஆம் ஆண்டிற்கான வாழ்த்து செய்திக்குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்,
பல்சமய, கலாச்சார, மொழியினைக்கொண்ட மக்கள் வாழும் எமது இலங்கைத் திருநாட்டில், பிறந்திருக்கும் இவ் 2014 ம் புதிய ஆண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்கவேண்டும்.
அதற்கு நாம் அணைவரும் வேற்றுமைகளை கழைந்து ஒரே தாய்நாட்டின் மக்கள் என்ற உள்ளத்து உணர்வுடன் இவ்வருடத்தை வரவேற்க வேண்டும்.
இனம், மதம், மொழிகள் என்ற வேலிகளைத்தாண்டி ஐக்கிய இலங்கைக்குள் வாழும் மக்களாக பொறுமை, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, ஏற்றுக்கொள்தல், போன்ற நட்பண்புகளை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
பிறந்திருக்கும் இவ் 2014 ம் புதிய ஆண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இருக்கவேண்டும் அதேவேளை சுயநலமற்ற சுதந்திரத்தை நாட்டில் உள்ள அணைவரும் அனுபவிக்க வேண்டும் என எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டிநிற்கின்றேன்.
இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினரும் எதிர்கட்சியின் பிரதம கொறடாவுமான றிப்கான் பதியூதீன் வெளியிட்டிருக்கும் புதுவருட வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.


0 Comments