Subscribe Us

header ads

இலங்கையின் மொத்த சனத்தொகையில் இணையத்தில் மேய்வோரின் வீதம் 11.4%

இலங்கை சனத்தொகையில் நூற்றுக்கு 11.4 சதவீதமானவர்கள் வீடுகளில்
இணையம் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 9.2 சதவீதமானோர் இணைய நிலையங்கள் உள்ளிட்ட வேறு இடங்களில் இணையம் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள தரவுபடி, கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானவர்கள் வீட்டில் இணையம் பயன்படுத்துவதாகவும் அது நூற்றுக்கு 26 சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு வழியில் 15.2 சதவீதமானவர்கள் இணையம் பயன்படுத்துகின்றனர்.

கம்பஹா மாவட்டத்திலும் அதிகமானவர்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் வட கிழக்கு பகுதிகளிலும் இணைய பாவனை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments