(TM) 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து குப்பைக்கு வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.பதுளை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு குப்பைக்கும் வரி அறவிடப்படவிருக்கின்றது. அந்த எல்லைக்குட்பட்ட அரச நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகளுக்கே வரி அறவிடப்படவிருக்கின்றது.
வெளியேற்றப்படும் குப்பைகளின் அளவுக்கு ஏற்பவே வரி அறிவிடப்படும் என்று அந்த சபை அறிவித்துள்ளது.
குப்பைகளை, உக்கிபோகும் மற்றும் உக்கிபோகாத குப்பைகள் என வேறுபடுத்தி தந்தால் குப்பைக்காக அறவிடப்படும் வரியில் அரைவாசி குறைக்கப்படும் என்றும் அந்த நகர சபை அறிவித்துள்ளது.

0 Comments