Subscribe Us

header ads

சவூதி அரேபிய முதலாளி நட்டஈடாக கொடுத்த 5000 றியாலை ஏற்க மறுத்த இலங்கையர்..!

(RR)
கடமையின்போது தனது கால் ஒன்றை இழந்த இலங்கைத் தொழிலாளி ஒருவர் தனது தொழில் வழங்குநர் நட்டஈடாக கொடுக்க முன்வந்த 5000 சவுதி றியாலை ஏற்க மறுத்துள்ளார்.

29 வயதான ருவான் ஹேரத் என்பவரே அந்த நட்டஈட்டு தொகையை ஏற்கமறுத்துவிட்டார்.

வாகனத்தை முன்வெளிச்சமின்றி ஓட்டியபோது அவர் விபத்துக்கு ஆளாகினார். தனது எஜமான் முன்வெளிச்சம் இல்லையென்பதை தெரிந்துகொண்டும் தன்னை இந்த வாகனத்தை ஓட்ட நிர்ப்பந்தித்ததாக ஹேரத் கூறினார்.

5000 றியால் நட்டஈடு தனது முன்று மாத சம்பளத்துக்கு சமமானது எனவும் தனக்கு நியாயமான நட்டஈடு கிடைக்கவேண்டுமெனவும் அவர் கூறியிருந்தார்.

இவருக்கு இரண்டு வயது குழந்தையொன்றும் உள்ளது. இவரது கடைசி மாத சம்பளத்தையும் தரவில்லை என அவர் கூறினார்.

தான் வேலை செய்யும் கம்பனியின் தொழிலாளர்களை தொழில் தருநர் அடிமைகள் போல நடத்துவதாக அவர் கூறினார். தான் ஒரு நாளில் 20 தடவைகள் மணல் லொரியை சீமெந்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இவருக்கு நியாயமான நட்டஈடு பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சவுதி அரேபியாவிலுள்ள தூதரக அதிகாரியொருவர் கூறினார்

Post a Comment

0 Comments