(எம்.எம்.நௌபர்)
இலங்கையின் வட மாகாணம் பனைவளம் அதிகம் நிறைந்துள்ள மாகாணமாக விளங்கி வருகின்ற அதேவேளை வடமேல் மாகாணத்திலும் ஆங்காங்கே பனை வளம் நிறைந்துள்ள பிதேசமாக கற்பிட்டிப் பிரதேசம் அமைந்து காணப்படுகின்றது. இயற்கைத்துறைமுகம், கடல்வளம், மணல்வளம், பனைவளம் பான்ற பல்வேறு இயற்கை வளம் பொருந்திய பிரதேசம்தான்
கற்பிட்டிப் பிரதேசம்.
பலாவியிலிருந்து கற்பிட்டி செல்லும் பிரதான வீதியூடாக செல்லும்போது கண்களைக் கவரும் தென்னை வளங்களை நாங்கள் கண்டாலும் ஒற்றைப்னை என்றழைக்கப்படும் டச்பே, முகத்துவாரம், தில்லையடி, கண்டல்குழி உள்ளக பாதைகளினூடாக பூனைப்பிட்டி வரைக்குமான பயணிக்கும் போது பனைவளங்கைளை அதிகமாகக் காணமுடிகிறது.
இங்கு பனைவளம் அதிகம் காணப்படுவதனால் கற்பிட்டி நகரில் பனைவள அபிவிருத்தி நலையம் அமைக்கப்பட்டு அதனூடாக பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதை நாம் காணலாம்.
கற்பிட்டிப் பிரதேசம்.
பலாவியிலிருந்து கற்பிட்டி செல்லும் பிரதான வீதியூடாக செல்லும்போது கண்களைக் கவரும் தென்னை வளங்களை நாங்கள் கண்டாலும் ஒற்றைப்னை என்றழைக்கப்படும் டச்பே, முகத்துவாரம், தில்லையடி, கண்டல்குழி உள்ளக பாதைகளினூடாக பூனைப்பிட்டி வரைக்குமான பயணிக்கும் போது பனைவளங்கைளை அதிகமாகக் காணமுடிகிறது.
இங்கு பனைவளம் அதிகம் காணப்படுவதனால் கற்பிட்டி நகரில் பனைவள அபிவிருத்தி நலையம் அமைக்கப்பட்டு அதனூடாக பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதை நாம் காணலாம்.
அங்கு 250க்கும் மேற்பட்ட பனைவள உற்பத்திச் செயற்பாடுகள் இன்றும் நடைபெறுகின்றன. இதில் வருந்தக் கூடிய விடயம் என்னவென்றால் பனை அபிவிருத்தி நிலையம் பற்றியோ அதன் செயற்பாடுகள் பற்றியோ மக்கள்
அறிந்திராமைதான்.
இனி பனைமரம் பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் பார்ப்போம்.
பனையின் ஓலையிலிருந்து வேர் வரைக்குமான எல்லாமே பயன் தரக் கூடியவைதான். இருந்தாலும் பனைமரம் பற்றி பலரும் அறியாத சில விடங்களைப்பற்றிப் பார்ப்போம்.
அறிந்திராமைதான்.
இனி பனைமரம் பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் பார்ப்போம்.
பனையின் ஓலையிலிருந்து வேர் வரைக்குமான எல்லாமே பயன் தரக் கூடியவைதான். இருந்தாலும் பனைமரம் பற்றி பலரும் அறியாத சில விடங்களைப்பற்றிப் பார்ப்போம்.
- பனை மரத்துக்கு ” போராசுஸ் ஃப்லபெல்லிபெர் “ ( Borasus Flabellifer ) என்று தாவரவியல் பெயர் உள்ளது. இது கிரேக்கச் சொற்கள். Borasus என்பது பனம்பழத்தின் வழவழப்பான .
- வெளித்தோலைக் குறிப்பது. Flabellifer என்பதன் பொருள் விசிறி தூக்கி என்பது. பனை மட்டைகள் விசிறி வடிவில் உள்ளவை. பனைமரம் ” பால்மே ” குடும்பத்தைச் ( Palme Family ) சேர்ந்தது.
- பனை மரம் இந்தியா தமிழ் நாடு மற்றும் கம்போடியாவிலும் தேசிய மரமாகப் போற்றப்படும் சிறப்புக்குரியது.
- பனை மரம் முப்பது மீட்டர் உயரம் வளரும் நெடிய மரமாகும். அதன் மட்டைகள் மூன்று மீட்டர் நீளம் உள்ளவை.
- இலங்கை, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் பண்டைய காலத்தில் பனைமட்டைகளில் எழுதி ஓலைச் சுவடிகளாகப் பாதுகாத்துள்ளனர். பனை மட்டை வீட்டுக் கூரை, பாய், கூடை, விசிறி, குடை போன்றவற்றுக்குப் பயன்பட்டுள்ளது.
இதுபோன்று பனை மரத்தில் சுமார் 800 பயன்பாடுகள் உள்ளதாகக் கூறப்படுகின்றன. அதிகமான காற்று வீசும்போது பனை மரமும் லேசாக அசைத்து ஆடும். அப்போது பனை ஓலைகள் ஒன்றோடொன்று உரசும்போது ஒரு ஓசை எழும். இதை வைத்தே நம் முன்னோர்கள் ” பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது ” என்று அர்த்தத்துடன் பழமொழியும் கூறியுள்ளனர்.
பனம்பழத்தின் சுவையே தனி. அதன் மணமும் அப்படியே. இனிப்பும் கசப்பும் கலந்த சுவையோடு நல்ல மணத்துடன் உள்ளே மஞ்சள் நிறத்தில் சாறு நிரம்பிய சதையையும் நாரையும் கொண்டது பனம்பழம். பனம்பழம் எப்போதும் கிடைக்காது. வருடத்தில் சில மாதங்களில்தான் அது கிடைப்பதுண்டு. அப்போதுதான் கிராமங்களில் நொங்கு, எளிதில் கிடைக்கும்.
( நொங்கு காலத்தில் நான் எனது நன்பர்களுடன் குலை குலையாக பறித்து பனை மட்டைகளில் மடித்து சாப்பிட்டது இன்றும் நல்ல அனுபவம்) பனம்பழம் மரங்களிலேயே பழுத்துவிடுபவை. பழுத்த பனம்பழங்கள் மரத்திலிருந்து தானாக கீழே விழுந்துவிடும். இரவில் விழுபவை காலையில் மரத்தடியில் கிடக்கும். யார் அந்த பக்கம்
விடியலில் போகிறார்களோ அவர்கள் அவற்றை எடுத்துக்கொள்வார்கள்.
அதிலும் நொங்குக்காக வெட்டப்படாத பனங்காய்களின் குலைகள் மரத்திலேயே இருந்தால்தான் அவை பழுத்து பனம்பழமாகும். பழுத்த பழமாக இருந்தாலும் அதன் தோல் வாழவழப்புடன் கடினமாகவும் இருக்கும். அதைக் கடித்து பிய்த்து உள்ளேயுள்ள சதையையும் நாரையும் மென்று சப்பினால் சுவையோ சுவை!
கற்பிட்டி தலவில சந்தானா மாதா தேவாலயத் திரு விழாக்களின் போது பனம்பழம், நொங்கு, பனங் கிழங்கு, ஒடியல், பனங்கருப்பட்டி, பனாட்டு, பாய், பெட்டி, அஞ்சறைப்பெட்டி, தொப்பி, பணியாரம் போன்ற பல்வேறு உற்பத்திகள் அதிக வருமானம் பெற்றுத்தரும் உற்பத்திகளாகும்.
பனம்பழத்தின் சுவை சிறு வயதிலேயே மூளையில் நன்கு பதிந்துவிட்டதால், இப்போதுகூட பனம்பழம் என்று நினைத்த மாத்திரத்தில் நாவில் உமிழ்நீர் ஊரும்.
பனை வளத்துடன்தொடர்புடைய 2009ம் ஆண்டு நடந்த சம்பவம் ஒன்று இன்றும் பசுமையாக உள்ளதால் அந்த அனுபவத்தை அப்படியே இப்போது எழுத முடிகிறது.
அப்போது நான் வருமான அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்டத்தில் பணிபுரிந்தேன். அனுராதபுரத்தில் நடைபெறும் மக்கள் சந்தை ஒன்றில் பங்களிப்புச் செய்ய அழைப்பு வந்ததுடன் பிரதேசத்தின் உற்பத்திப் பொருடகளுடன் வருகைத்தருமாறு குறிப்பிட்டனர்.
அதற்காக நானும் சக ஊழியர்கள் சிலரும், பனைவள அபிவிருத்தி நிலைய பெண் அதிகாரிகள் இருவரும் குறித்த தினத்தில் அங்குசென்றோம். நாட்டின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து பல உற்பத்திப் பொருட்கள் அங்கு வந்திருந்தன.
நாமும் கற்பிட்டியின் சிறப்பு வாய்ந்த கருவாடு, இறால், நன்டு போன்றவற்றுடன் பனியாரம் உண்டுபன்னும் பனம்பழச் சாறுடன் சென்றிருந்தோம். காலை 10 மணிக்கு சந்தை ஆரம்பமானது. பனைவள அபிவிருத்தி நிலைய பெண் அதிகாரிகள் இருவரிடமும் பனம்பழ பணியாரம் செய்வதற்கான வசதிகள்செய்து கொடுத்தோம். வசேடம் என்னவென்றால்
சந்தைக்கு வந்த நுகர்வோர் மற்றும் வியாபரிகள் எல்லோரும் கற்பிட்டி சந்தைக்கு வந்து கூடி பணியாரத்தின் சுவையில் மூழ்கிப் போயினர். 2 மணி நேரத்தில் இரண்டு கேண்களிலிருந்த
40 லீட்டர் பனம்பழச்சாறு முடிந்து விட்டது. எமது சந்தைக்கு முதலிடமும் கிடைத்த்து. அப்போதுதான் விளங்கியது முற்றத்து மல்லிகைக்கு வாசனை இல்லை என்பதுபோல கற்பிட்டியின் பனை வளத்தின் பெருமை.


0 Comments