Subscribe Us

இணையம் மூலமான வாகன வருமான அனுமதிப் பத்திரத்திற்கு 25% கழிவு

வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும்போது 25 சதவீத கழிவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகன வருமான அனுமதிப் பத்திர கட்டணமாக 6,000 ரூபாவுக்கு அதிகப்படாத பணத்தைச் செலுத்த வேண்டிய சகல மேல் மாகாண பதிவு வாகனங்களுக்கும் இந்த 25 சதவீத கழிவு வழங்கப்படும்.

மேல் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரின் பணியகமும் 'இக்டா' என்று அழைக்கப்படும் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமும் இணைந்து இந்த சலுகை திட்டத்ததை அமுல்படுத்துகின்றன.

இதன்படி மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு வாகனத்திற்கும் இணையத்தின் மூலம் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை இன்று சனிக்கிழமையிலிருந்து 23ஆம் திகதி திங்கட்கிழமை வரை பெற்றுக்கொள்ளுமிடத்து 25 சதவீத விசேட கழிவினை பெற்றுக்கொள்ள முடியும் என இக்டாவின் தலைவர் பேராசிரியர் பீ. டப்ளிவ். ஆபாசிங்ஹ தெரிவித்தார்.

www.srilanka.lk எனும் இணையத்தளத்துக்குள் நுழைந்து வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை  பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரச சேவைகளை தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பெற்றுக்கொடுக்கும் மஹிந்த சிந்தனை கொள்கையின் படி செயற்பட்டு இச்சேவை வழங்கப்படுவதுடன் இதன் மூலம் ஒரு சலுகையையும் மக்களுக்கு வழங்க முடியும் என அவர் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments