Subscribe Us

கனடாவில் விபசாரத்துக்கு எதிரான அனைத்து சட்டங்களும் நீக்கம்; கனேடிய உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கனடாவில் விபசாரத்துக்கு எதிரான அனைத்து சட்டங்களையும் அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று ரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளது.

விபசார விடுதியை நடத்துதல், விபசார வருமானத்தில வாழ்க்கையை நடத்துதால், வீதிகளில்விபசாரத்துக்காக வாடிக்கையாளர்களை நாடுதல் ஆகிய 3 சட்டங்களையும் கனேடிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்தது.

இது தொடர்பாக 9 நீதிபதிகள் கொண்ட குழாமின் முன்னிலையில்  நடைபெற்ற வழக்கில் 9 பேரும் இச்சட்டங்களை ரத்துச்செய்வதற்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.

எனினும் இது தொடர்பாக புதிய சட்டங்களை இயற்றி, இதற்கு பதிலளிப்பதற்கு  கனேடிய அரசாங்கத்துக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒருவருடகால அவகாசம் வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பானது பாலியல் தொழிலாளர்களுக்கு  கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. இதற்குமுன் மாநில  ஒன்டாரியோ மேன்முறையீட்டு நீதிமன்றமும் விபசார விடுதி மீதான தடையைநீக்கி தீர்ப்பளித்திருந்தது.  இதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பாக தொழில்புரியும் சூழல்ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இத்தடையானது பெண்களை மேலும் ஆபத்திற்குள் தள்ளுவதாக ஒன்டாரியோ நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

Post a Comment

0 Comments