Subscribe Us

header ads

15 வயதான சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம்; 20 வயதான இளைஞன் கைது

15 வயதுடைய சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகச் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.



குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்  சந்தேக நபரையும் சிறுமியையும் கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவட்டவான் எனும் பிரதேச வீமொன்றில் இருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபருடன் தான் காதல் தொடர்பு கொண்டிருந்ததாகவும், தனது காதலனின் அழைப்புக்கேற்ப தான் அவருடன் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.  தாம் கைது செய்யப்படும் வரை கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் அச்சிறுமி பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான இளைஞரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வென்னப்புவ  ஆதம் சந்தியில் அமைந்துள்ள ஓட்டுத் தொழிற்சாலையொன்றின் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி ஒரவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.

Post a Comment

0 Comments