இங்கிலாந்தில் உள்ள Mhairi Murdoch வயது பெண் தனது கணவர் Russell
அவர்களுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள்
இருக்கின்றன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தின் மறுதினமான பாக்ஸிங்
தினத்தன்று திடீரென Mhairi Murdoch, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்ததால்
அவரது கணவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
கடந்த பத்து மாதங்களாக கர்ப்பம் ஆனதாக எவ்வித அறிகுறியும் தன்னிடம்
தெரியவில்லை என்றும் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கும் ஒழுங்காக
வந்துகொண்டிருந்ததால் இந்த குழந்தை எப்படி உருவானது என்றே தெரியவிலை
என்றும் Mhairi Murdoch கூறியுள்ளார்.
பாக்ஸிங் தினத்தன்று தனக்கு கடுமையான வயிற்றுவலி இருந்ததால், உடனே
சமையலறைக்கு சென்று ஆரஞ்சு ஜூஸ் தயார் செய்துகொண்டிருந்ததாகவும், அப்போது
தனது வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வருவதை தான் அறிந்ததாகவும்,
உடனடியாக தனது கணவர் உதவியுடன் குழந்தையை பெற்றதாக குறிப்பிட்ட அவர், இது
தங்களுக்கு கடவுளாக கொடுத்த வித்தியாசமான கிறிஸ்துமஸ் பரிசுஎன்றும் அவர்
கூறியுள்ளார்.
உடனே அவர் Aberdeen Maternity Hospital
என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டார் என்றும் மருத்துவமனையில் தாய்,
குழந்தை இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
குழந்தை நல்ல எடையுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதாக கூறியுள்ள
மருத்துவமனை நிர்வாகம், வெகு அபூர்வமாக இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதாகவும்
கூறினர்.


0 Comments