(K.கிஷாந்தன், R.ரஞ்ஜன்)
இலங்கையில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளில் ஒன்று டெவோன் நீர்வீழ்ச்சி.
எழில் கொஞ்சும் மலையக பகுதியின் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் டெவோன்
பிரதேசத்தில் அமைந்துள்ள டெவோன் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபல்யமானது. இந்த
நீர்வீழ்ச்சி மகாவலி கங்கையின் கிளையாற்றில் அமைந்துள்ளது.
இந்த டெவோன் நீர்வீழ்ச்சி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவரும் ஒரு நீர்வீழ்ச்சியாகும். இந்
நீர்வீழ்ச்சியானது 281 அடி உயரத்தை கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.
இந்த வருடத்திலும் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
சுற்றுலாப்பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு தவறவில்லை என்பது
குறிப்பிடதக்கது.

.jpg)
.jpg)
0 Comments