( எம்.எம்.ஏ.ஸமட்)
சகல அரச பாடசாலைகளினதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாணவர்களின் சுகாதாரத்திற்கு கேடுவிளைக்கும் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டும், போசாக்கான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யும் நோக்குடனும் 2014ஆம் கல்வியாண்டில் சகல அரச பாடசாலைகளினதும் சிற்றுண்டிச்சாலைகளில ;கல்வி அமைச்சுடன் இணைந்து இச்சோதனை நடவடிக்கைகளை; மேற்கொள்ளப்படவுள்ளன.
பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படவேண்டிய மற்றும் விற்பணை செய்யத் தடைசெய்யப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குடி பானங்கள் தொடர்பாக கடந்த வருடம சகல அரச பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சினால் விஷேட சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
சுகாதாரத்திற்கு ஊறுவிளைவிக்கும் உணவுப் பழக்கவழக்கத்தினால் பல மாணவர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். ஏறக்குறைய 10 ஆயிரம் பாடசாலைகளில் கல்வி கற்றும் 40 இலட்சம் மாணவர் தொகையில் 20 வீதமான மாணவர்கள் நீரழிவு நோய்த்தாக்கத்திற்கு ஆளாகியுள்ளமை சோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அமைச்சு குறிப்பிடுகிறது.
மேலும், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள பொதுச் சுகாதார அதிகாரிகள் இது தொடர்பில் பயிற்றப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments