Subscribe Us

header ads

IT கம்பெனியில் வேலை கிடைத்ததும்..!

(Rimaz Ahamed)


* முத நாளு. புது இடம். புதுப்புது ஆளுக. கொஞ்சம் இல்ல. ரொம்பவே மெரட்டலா இருக்கும். பாக்குற ஆளுக பூராமே புத்திசாலிகளாத் தெரியும். கவலப்படாம காலடி எடுத்து வைங்கப்பா.

* ட்ரெயினிங்னு ஒரு சமாச்சாரத்த ஆரம்பிப்பாய்ங்க. ஒண்ணுமில்ல. அவுக செஞ்சிருக்கிற தப்புகள உங்கள வச்சுத் திருத்திக்கிற விசயம். சொன்னத சொன்ன நேரத்துக்கு முன்னாடியே செஞ்சுப்புட்டா நம்ம இடம் நிரந்தரம்.

* பாக்குற புள்ளங்க எல்லாமே அழகாத் தெரியும். தெரியணும்! அதுக்காகப் பொசுக்குன்னு ரோசாப்பூவும், கார்டுமா காதலிக்கக் கெளம்பிரக்கூடாது! ட்ரெயினிங்தான் முக்கியம். ரொம்ப அழகா இருந்தா காப்பி குடிக்கிறதோட நிறுத்திக்கிடுங்க. ட்ரெயினிங் முடிஞ்சும் அந்தப் பொண்ணு அழகாத் தெரிஞ்சா கார்டத் தூசிதட்டிக் குடுக்கலாம். (வீட்டு நிலைமையை யோசிச்ச பிறகு!)

* ஆபீஸ்ல என்ன HR Policy இருக்கோ அதக் கண்ண மூடிக்கிட்டு பின்பற்றணும். வெப்சைட் எதுனா block பண்ணாய்ங்கன்னா தொழில்நுட்பத்தப் பயன்படுத்திப் பாக்கக்கூடாது. இதேமாதிரி நல்லவனா வாழ்ந்தா Appraisal அப்ப நம்மள நெனச்சுப் பாப்பாய்ங்க!

* சம்பளம் கைக்கு வந்ததுமே சமுதாயத்துக்கே பார்ட்டிவக்கத் தோணும். தப்பில்ல. அவுக இல்லாம நாம இல்ல. அதுக்காக மறுநாளே கடன்வாங்குற நெலம வந்துரக்கூடாது.

* நம்ம வேலைய நாலு பேரு பாராட்டினா எட்டு பேத்துக்காவது வயிறு எரியும். அரசியல் பண்ணுவாய்ங்க. யாருன்னு தெரிஞ்சாலும் சண்ட, கிண்டன்னு கெளம்பக்கூடாது. உங்க திறம பதில்சொல்லட்டும்!

* ஆபீஸ்ல உங்களுக்குக் கொடுக்கிறதாச் சொன்ன விசயங்கள் கெடக்கலன்னா செக்யூரிட்டி வரைக்கும் தேடித் தேடிப் பொலம்பாம சமந்தப்பட்ட ஆளுககிட்ட உண்மையச் சொல்றதுதான் நல்லது.

* வெளிநாட்டு வாய்ப்பு கெடக்கலன்னா வெளிநடப்பு செய்யக்கூடாது. நமக்கு வரவேண்டயது தன்னால வரும். பொறுமை ரொம்ப முக்கியம்.

* ஒரு வருசம் தாண்டுனதுமே ஒரு மெதப்பு வரும். (சாதிச்சுட்டோம்ல!) மெதப்பு மனசோட இருக்கட்டும். ஒடனே பேப்பர் போட்டுட்டு அடுத்த கம்பெனியப் பாப்போம்னு எறங்குனா நட்டாறுதான். கொஞ்ச வருசத்திலேயே உங்க ப்ரொஃபைலுக்குத் தன்னால மரியாத கூடிரும். அடிக்கடி கம்பெனி மாத்துறதும் கட்சி மாத்துறதும் ஒண்ணுதான்!

* On-site போய்ட்டு வந்ததும் நம்ம ஊர் சுமாராத் தெரியலாம். ஆனா, இந்த சுமாரான மண்ணுதான் சூப்பர் வாழ்க்கயக் குடுத்தது. மறந்துடாதீங்க கண்மணிகளா!

Post a Comment

0 Comments