Subscribe Us

header ads

தற்போதைய வெளியுறவுக் கொள்கை குறித்து கருத்து வெளியிட முடியாது

தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் கருத்து
வெளியிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தமது ஆட்சிக் காலப்பகுதியில் மனித உரிமை மீறல் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க முடியாது எனவும், அவ்வாறு செய்தால் தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிறிசாந்தி குமாரசுவாமி என்ற யுவதி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் மட்டுமே பதிவாகியிருந்ததாகவும், அந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய படைவீரர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் 90 வீதமான வடக்கின் அதிகாரத்தை புலிகள் கொண்டிருந்ததாகவும், அதில் 75 வீதத்தை தமது ஆட்சிக் காலத்தில் மீட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் 25 வீதமான பகுதியை மட்டுமே மீட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் நாட்டை ஆட்சி செய்தவர் என்ற ரீதியில் மனித உரிமை, நல்லாட்சி மற்றும் ஊடக சுதந்திரம் போன்றன மிகவும் அவசியமானவை என்பதனைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறி;ப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments